பாமரனின் சிந்தனை
நான் ஒரு சாதாரண குடிமகன்.தேசத்தின் மீதும் மொழியின்மேலும் பற்று உடையவன் .அநீதியையோ ஊழலையோ நினைத்து எல்லோரையும் போல வயிறு எரிந்து குமுறுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.இதற்காகவா கண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்று பாரதி சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன்.அரசியல் மற்றும் இலக்கியம் பற்றி என்னுடைய எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள உள்ளேன்.நான் ஒன்றும் பெரிய எழுத்தாளனோ சிந்தனையாளனோ அல்ல.தயவு செய்து இந்த எளியேனின் உளறலை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Wednesday, December 1, 2010
கருணாநிதியின் விதண்டாவாதம்
கருணாநிதி எப்போதுமே பிரச்சனைகள் கை மீறி விட்டால் ஜாதி அஸ்திரததை கையில் எடுப்பது வழக்கம் .இந்த முறையும் ராசாவை 2 ஜி ஊழல் குற்றச்சாட்டுகளிருந்து காப்பாற்ற வேறு வழி இல்லாததால் அவர் ஒரு தலித் என்பதால் ஊடகங்கள் வரிந்துக்கட்டி அவரை எதிர்க்கிறது என்று கூறுகிறார்.நான் கேட்கிறேன் இப்போது ஊடகங்கள் ராசாவை மட்டுமல்ல எடியூரப்பா,அசோக் சவுஹான்,சுரேஷ் கல்மாதி போன்றவர்களையும் பல்வேறு ஊழல் குற்றங்களுக்காக எதிர்கிறார்களே அவர்களும் தலித்தா.ஏன் இப்படி தலித்களை கருணாநிதி இழிவு படுத்துகிறார்.ஏன் இப்படி ஊழலுக்கு ஜாதி சாயம் பூசுகிறார்.இதேபோல் நீதிபதி தினகரன் அவர்கள் புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தினார் என்று ஊர்ஜிதம் செய்தபோது இதே தலித் ஆயுதத்தை எடுத்தார்.டாக்டர் அம்பேத்கர்,கக்கன் போன்றவர்கள் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்த்தனர்.ஆனால் ஆ.ராசாவோ? .கருணாநிதி தன மனசாட்சியை கேட்டுக் கொள்ளட்டும்.
Friday, November 26, 2010
ஜெயகாந்தன்-1
சிறு வயதில் நான் ஜெயகாந்தனின் எழுத்துக்களால் மிகவும் கவரப்பட்டேன் விகடனில் அவ்வப்போது வரும் அவரின் முத்திரைக் கதைகளை மிகவும் விரும்பி படித்தேன். குறிப்பாக யுகசந்தி ,உண்மை சுடும் ,புதிய வார்ப்புகள்,தேவன்
வருவாரா , ஒரு பிடி சோறு
போன்ற கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன .நிமிர்ந்த தலையும் அச்சமில்லாமல் தன கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமும்.சமரசம் செய்து கொள்ளாத குணமும் என்னை அவர் பால் ஈர்த்தது அவருடைய படைப்புகள் ஒரே வட்டத்தில் இருக்காது. வெவ்வேறு பிரச்சினைகளை ஒவ்வொரு கோணத்தில் அணுகுவார்.அவர் படைப்புகளில் மனித நேயம் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட இனத்தையோ மதத்தையோ இழிவாக எழுதமாட்டார்
போன்ற கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன .நிமிர்ந்த தலையும் அச்சமில்லாமல் தன கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமும்.சமரசம் செய்து கொள்ளாத குணமும் என்னை அவர் பால் ஈர்த்தது அவருடைய படைப்புகள் ஒரே வட்டத்தில் இருக்காது. வெவ்வேறு பிரச்சினைகளை ஒவ்வொரு கோணத்தில் அணுகுவார்.அவர் படைப்புகளில் மனித நேயம் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட இனத்தையோ மதத்தையோ இழிவாக எழுதமாட்டார்
தமிழகமும் ஊழலும்-1
தமிழகத்தில் ஊழலைப் பற்றி மக்கள் கவலைப் படுவதேயில்லை.யார் எக்கேடுக்கேட்டுப் போனால் என்ன என்ற மனப்பான்மை நம்மிடையே காணப்படுகிறது.எதாவது ஊழலைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் உடனேயே ஆட்சியில் இருப்பவர்கள் முந்திய ஆட்சியாளர் செய்யவில்லையா என்று பதில் சொல்லுவார்.நாம் அதற்காகத்தானே முந்திய ஆட்சியாளர்களை பதவியை விட்டு நீக்கினோம்.இவர்களும் அதையே செய்வேன் என்றால் ஆட்சி மாற்றம் எதற்கு?சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றால் மற்ற மாநிலங்களை விட குற்றங்கள் இங்கே குறைவாக இருக்கிறது என்று புள்ளி விவரம் கொடுப்பார்கள்.குறை சொல்லி குரல் கொடுக்கும் மக்களுக்கு நீதிக் கிடைக்காது.சமாதானம்தான் கிடைக்கும்.லஞ்சம் என்பது பணியின் ஒரு பகுதி என்றும் போனஸ் போலவேன்ரும் சிறு வயதிலேயே இளைஞாகள் தங்களை தயார் செய்து கொள்கிறார்கள்.சாதரணமாக நாம் சிறு வயதில் பெரியவனான பின் மருத்துவராகவோ பொறியாளராகவோ அல்லது வக்கீலாகவோ படித்து சேவை செய்வேன் என்று சொல்லுவோம் .ஆனால் இக்காலத்தில் தான் பெரியவனான பின் அரசுத் துறையில் சேர்ந்து மேல் வருவாய் வரும் இலாகாவில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்கலாம் என்று கனவு காண்கின்றனர்.கையூட்டு பெறுவதை கேவலாமாக நினைக்கவில்லை இதனால் வரும் சந்ததிகள் எப்படி வேண்டுமானாலும் பணம் சேர்க்கலாம்.நீதி நேர்மை போன்ற நற்குணங்கள் வாழ்க்கைக்கு உதவாது என்ற மனப்பான்மையில் வாழ்கின்றனர்.
வட மொழியில் அரசன் எவ்வாறோ மக்கள் அவ்வாறே என்பர்.அதுபோல் 40 வருடங்களாக ௦ நேர்மையற்ற ஆட்சி நடப்பதால் மக்களும் ஆட்சியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நல்ல விஷயங்கள் எதுவும் இல்லாததால் மக்கள் தவறான பாதையில் போகின்றனர்
Subscribe to:
Posts (Atom)